சினிமா

பலூன் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா

Published On 2016-07-26 15:53 IST   |   Update On 2016-07-26 15:53:00 IST
யுவன் சங்கர் ராஜா ‘பலூன்’ படத்திற்கு இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய்-அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் ‘பலூன்’. இப்படத்தை சினிஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காதல் மற்றும் திகில் கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டடராக பணிபுரிகிறார்.

இப்படத்திற்காக பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இசையமைப்பாளர் யார் என்பது மட்டும் முடிவாகமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவை இப்படத்தில் ஒப்பந்தம் செய்தது குறித்து இயக்குனர் சினிஷ் கூறும்போது, முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு பிடித்தமான படமாகத்தான் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களை கவரக்கூடிய கதை என்பதால், ‘பலூன்’ படத்தில் மெலோடி பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நங்கள் கருதினோம். மெலோடி என்றாலே அது யுவன் சங்கர் ராஜாதான். எங்கள் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவருடைய இசையும், பாடல்களும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு முதுகெலும்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.

Similar News