சினிமா

சுந்தர்.சியின் பிரம்மாண்ட படத்தில் ஜெயம் ரவி?

Published On 2016-08-28 11:49 IST   |   Update On 2016-08-28 11:49:00 IST
சுந்தர்.சி. இயக்கும் பிரம்மாண்டமான படத்தில் ஜெயம் ரவி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
சுந்தர்.சி. அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் அமைந்த பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறார். இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படமாகும்.

இப்படத்தில் நடிக்க தற்போது நடிகர்-நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படமென்பதால், இப்படத்தில் தமிழின் முன்னணி கதாநாயகர்களை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதலில், இப்படத்தில் விஜய் நடிக்க இருந்தாகவும், தொடர்ந்து அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டதால் இப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது, இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருடன் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News