சினிமா
மீண்டும் விஷால் படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் மீண்டும் விஷாலின் புதிய படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் உள்ளது. அது எந்த படம்? என்பதை கீழே பார்ப்போம்..
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக வலம்வரும் ஸ்ருதிஹாசன், கடந்த 2014-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த 'பூஜை' படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது விஷால் நடித்து வரும் ‘கத்திச்சண்டை’ படத்திலும் அவர் இணையவுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்துவரும் நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் இப்படத்தில் ஒரு பாடல் பாடவுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் உருவாகும் ஒரு பாடலை பாடுவதற்காக ஸ்ருதிஹாசனை அணுகியதாகவும், அவர் பாட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இப்பாடலை பதிவு செய்யவிருக்கின்றனர்.
கத்திசண்டை படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் காமெடி நடிகர் வடிவேலு காமெடியான ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். மேலும், சூரியும் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த கம்பெனியான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார்.