சினிமா

புகழின் உச்சிக்கு சென்றும் எனக்கு தலைக்கனம் வரவில்லை: அனுஷ்கா

Published On 2016-09-06 08:46 IST   |   Update On 2016-09-06 08:46:00 IST
“புகழின் உச்சிக்கு சென்றும் எனக்கு தலைக்கனம் வரவில்லை” என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன். புது இடங்களுக்கு போனால் அங்குள்ள சூழ்நிலைகள் பிடிக்காது. அதில் இருந்து ஓடி விட தோன்றும். நான் சினிமாவுக்கு வந்த ஆரம்பமும் அப்படித்தான் இருந்தது. சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு எனது உலகம் ரொம்ப சிறியதாக இருந்தது. நெருக்கமான சிலருடன் மட்டுமே நட்பில் இருந்தேன்.

வீட்டில் டெலிவிஷன் பார்ப்பது, தோழிகளுடன் பேசுவது, புத்தகங்கள் படிப்பது என்றுதான் நாட்கள் நகர்ந்தன. சினிமாவுக்கு வந்ததும் வாழ்க்கை தலைகீழாக மாறியது. போகிற இடமெல்லாம் கூட்டம். ஆட்டோகிராப் கேட்டு அன்பு தொல்லைகள், படப்பிடிப்புகள், நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்து என்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. இவையெல்லாம் எனது வாழ்க்கையில் வராமல் போயிருந்தாலும் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பேன்.

சினிமா எனது உலகத்தை நூறு மடங்கு பெரிதாக்கி விட்டது. நிறைய நண்பர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். எத்தனையோ நாடுகளில் சுற்றுகிறேன். பாராட்டுகள் வருகிறது. புகழின் உச்சிக்கு போய் விட்டாலும் கூட எனக்கு தலைக்கனம் வரவில்லை. வீட்டுக்கு போய்விட்டால் எல்லாவற்றையும் மறந்து விட்டு சாதாரண பெண்ணாகவே இருக்கிறேன். சினிமாவில் ஆரம்ப காலத்தில் அதிகமாக மற்றவர்களிடம் பழகாமல் இருந்தேன். அதன் பிறகு எல்லோரிடமும் நெருக்கமாகி விட்டேன்.

சினிமாவில் என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் எனது சொந்தக்காரர்கள் போல் ஆகி விட்டனர். நிறைய விஷயங்களை சினிமா எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Similar News