சினிமா
நடிகர் சிவாஜி பெயரில் 8 பேருக்கு விருது
நடிகர் சிவாஜிகணேசனின் 88-வது பிறந்தஇன்றுயொட்டி 8 பேருக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார்.
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் 88-வது பிறந்த நாளையொட்டி சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சினிமா பணியாளர்களுக்கு ‘நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு பரிசு’ மற்றும் மூத்த ரசிகர்களுக்கு ‘நடிகர் திலகம் விருது’ வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.
விழாவுக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தலைமை தாங்கி நடிகைகள் வாணிஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராய் ஆகிய 5 பேருக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு பரிசும், மூத்த ரசிகர்கள் காஞ்சீபுரம் ஏ.ஜெயவேலு, விருதுநகர் கே.வி.நாகமணி, கும்பகோணம் சி.ஜி.ராஜசேகரன் ஆகிய 3 பேருக்கு நடிகர் திலகம் விருதையும் வழங்கினார்.
விழாவில் வெங்கையாநாயுடு பேசியதாவது:-
நடிகர் சிவாஜிகணேசன் மறைந்தாலும் அவர் கோடிக்கணக்கான ரசிகர்களின் நினைவுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
நடிகர் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் மூலம் நல்ல கருத்துகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது. குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த சிறந்த சுதந்திரபோராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழை உலக அளவிற்கு சிவாஜிகணேசன் கொண்டு சென்றார்.
அண்டை நாடான பாகிஸ்தானுடனும் நட்புறவுடன் இருக்க விரும்புகிறோம். ஆனால் அந்த நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால், அதனை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பா.ஜனதா மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ஜி.ராம்குமார் வரவேற்றார். நடிகர் பிரபு நன்றி கூறினார்.