சினிமா

இன்று வெளியாகும் `மெர்சல்' படத்தின் மற்றுமொரு அறிவிப்பு

Published On 2017-06-24 12:52 IST   |   Update On 2017-06-24 12:52:00 IST
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தின் மற்றுமொரு அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படமான `மெர்சல்'  படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

`மெர்சல்' படத்தின் முதல் போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் கையில் இருக்கும் மண்ணை தட்டிக்கொண்டு போஸ் கொடுத்திருந்தார். இரண்டாவது போஸ்டரில்ஒரு மேஜிக் கலைஞருக்கான உத்திகளுடன் கையில் இருக்கும் சீட்டுக்கட்டை சிதறவிடும்படியாக அந்த போஸ்டர் இருந்தது. விஜய் பிறந்தநாளுடன் இரண்டு போஸ்டர்கள் வெளியானதால், அவரது ரசிகர்களுக்கு செமயான விருந்தாக அது அமைந்தது.



`மெர்சல்' படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுவதால், விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு விருந்தும் காத்திருக்கிறது. அது என்னவென்றால் `மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் ஒரு மணியளவில் வெளியாக இருக்கிறது.  

3 கதாபாத்திரத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Similar News