சினிமா
பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல: கீர்த்தி சுரேஷ்
பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல, நடிக்கும் படங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடி ஆனார்.
தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும், தமிழிலும் வெளிவர இருக்கும் சாவித்ரி வாழ்க்கை வரலறு படத்தில் நடிக்கிறார். நானி, பவன்கல்யாண் ஆகியோருடன் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய்யுடன் நடித்துவிட்டீர்கள். அடுத்து அஜித்துடன் நடிக்க முயற்சி செய்கிறீர்களா? என்றுகேட்ட போது கீர்த்திசுரேஷ் அளித்த பதில்...
“அஜித் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என்றாலும், தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாய்ப்பு வரும் போது தானாக வரும். எனவே, வருகிற படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
இந்த ஹீரோக்களுடன் தான் நடிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள் அல்ல. நடிக்கும் படங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியம்”.