சினிமா
தெலுங்கு சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்தும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்பைடர் படத்தின் தமிழ் ரிலீசுக்கு முன்பாக நடைபெறும் மகேஷ் பாபு அறிமுக நநிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஸ்பைடர்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி வெளியாகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இருந்து பூம் பூம் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ்பட நாயகனாக அறிமுகம் செய்யும் விழா வருகிற செப்டம்பர் 9-ந் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
`ஸ்பைடர்' படத்தின் தமிழ் பதிப்பில் மகேஷ்பாபு அவரது சொந்த குரலிலேயே டப்பிங் பேசி இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருக்கிறார். பரத், ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.