சினிமா

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் வெங்கட் பிரபு - வைபவ் கூட்டணி

Published On 2017-11-01 21:01 IST   |   Update On 2017-11-01 21:01:00 IST
வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடித்து வரும் புதிய படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வெங்கட் பிரபுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஆர்.கே.நகர்'.

சரவண ராஜன் இயக்கத்தில் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் வைபவ் நாயகனாகவும், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கிறார்.

வைபவ் நடிப்பில் `மேயாத மான்' படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், வைபவின் அடுத்த படமான ஆர்.கே.நகர் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஏற்கனவே சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News