சினிமா
சினிமாவில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்
தற்போது பல சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகர் - நடிகைகளாக களம் இறங்குகிறார்கள். #DhruvVikram #IshaanKhattar
நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரின் வாரிசுகள் பலர் ஏற்கனவே சினிமாவுக்கு வந்துள்ளனர். நடிகர்கள் தனுஷ், சிம்பு, விக்ரம் பிரபு, சிபிராஜ், கவுதம் கார்த்திக், அதர்வா, அருண் விஜய், சாந்தனு, துல்கர் சல்மான், சண்முக பாண்டியன், நடிகைகள் சுருதிஹாசன், ஐஸ்வர்யா, கார்த்திகா, துளசி, விஜய லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் என்று அந்த பட்டியல் நீள்கிறது.
தற்போது மேலும் பல சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்-நடிகைகளாக களம் இறங்குகிறார்கள். நடிகர் விக்ரம், தனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இதற்காக தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதையை தேர்வு செய்து இருக்கிறார்.
இந்த படம் தமிழில் தயாராகிறது. இதில் துருவ் கதாநாயகனுக்கான நடிப்பு, நடனம், சண்டை என்று அனைத்து பயிற்சிகளும் பெற்று நடிக்கிறார். தந்தையை போல் துருவ் வருகையை திரையுலகினர் பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள். தமிழ், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உள்ள மோகன்லால் மகன் பிரணவ், ஆதி என்ற மலையாள படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.
இவர் ஏற்கனவே புனர் ஜனி என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கேரள அரசிடம் இருந்து விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தை டைரக்டு செய்த ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
1970, 80-களில் தமிழ், இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவி மகள் ஜானவி, தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். நட்சத்திர தம்பதி ராஜ்குமார்-ஜீவிதா மகள் ஷிவானியும் படிப்பை முடித்து நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். இவர் இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘2 ஸ்டேட்ஸ்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிக்கிறார்.
நடிகை லிசி மகள் கல்யாணி ‘ஹலோ’ என்ற தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாகி உள்ளார். இதில் கதாநாயகனாக நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கிறார். இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கும் அவரது முதல் மனைவி நடிகை அம்ருதாவுக்கும் பிறந்த பெண் சாரா அலிகான் கேதார் நாத் என்ற இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா, ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் ஆகியோரும் கதாநாயகர்கள் ஆகிறார்கள்.