சினிமா
மீண்டும் ஒன்று சேரும் சிம்பு - ஓவியா
‘மரண மட்டை’ என்ற பாடல் மூலம் ஒன்று சேர்ந்த சிம்பு - ஓவியா, தற்போது மீண்டும் புதிய படம் மூலம் ஒன்று சேர இருக்கிறார்கள்.
சமீபகாலமாக சிம்பு - ஓவியா பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சிம்புவும் ஓவியாவும் காதலிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவித்தார்கள்.
சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு - ஓவியா இருவரும் இணைந்து ‘மரண மட்டை’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் இவர்கள் புதிய படம் மூலம் இணைய இருக்கிறார்கள்.
நாயகன் - நாயகி இல்லாமல், ஓவியா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இணைய இருக்கிறார்கள். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் ஓவியா நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை அனிதா என்பவர் இயக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு சிம்பு இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தைத் தொடர்ந்து சிம்பு இசையமைக்கும் இரண்டாவது படம் இது. சிம்பு இசையில் ஏற்கெனவே ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஓவியா. அந்த நட்பு அடிப்படையில் ஓவியா படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டாராம் சிம்பு.