சினிமா

பத்மாவத் படத்தில் தீபிகா அணிந்த நகைகளுக்கு கிடைக்கும் அமோக வரவேற்பு

Published On 2018-03-17 11:09 IST   |   Update On 2018-03-17 11:09:00 IST
பத்மாவத் படத்தில் தீபிகா படுகோனே அணிந்திருந்த நகைகள் விற்பனைக்கு வந்து அமோகமாக விற்பனையாவதாக மும்பை நகை வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Padmaavat
தீபிகா படுகோனே நடிப்பில் பத்மாவத் படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் வந்த தீபிகா படுகோனே அணிந்திருந்த நகைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த பெண்கள் தீபிகாவின் நகைகளை பற்றியே பேசினார்கள். பழங்கால பாரம்பரிய வடிவத்தில் அந்த நகைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது இதில் குறிப்பிடத்தக்கது.

தற்போது தீபிகா படுகோனே அணிந்த நகைகளை போன்ற டிசைன்கள் வட மாநிலங்களில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. பல நகைக்கடைகளில் இந்த வகை நகைகளை விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள். திருமணங்களுக்கு இவற்றை வாங்கி செல்கிறார்கள். மணப்பெண்களும் இந்த நகைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘பத்மாவத்’ வகை நகைகள் அமோகமாக விற்பனையாவதாக மும்பை நகை வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர். #Padmaavat #DeepikaPadukone

Similar News