சினிமா

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2018-10-11 13:36 IST   |   Update On 2018-10-11 13:36:00 IST
தமிழில் விக்ரம், தனுஷை தொடர்ந்து தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருக்கும் நடிக்கருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். #AishwaryaRajesh
தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது ‘வடசென்னை’ திரைப்படம் உருவாகியுள்ளது. தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார். இப்படம் ஆயுத பூஜை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தமிழில் பிசியாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்திலும் இந்தியிலும் ஒவ்வொரு படங்கள் மட்டும் நடித்தார்.

தெலுங்கில் அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த போதும் வலுவான திரைக்கதையை எதிர்பார்த்த அவர் அந்த வாய்ப்புகளை தவிர்த்துவந்தார்.



இப்போது கிரந்தி மாதவ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ராசி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அல்லாமல் நடிப்பதற்குச் சவாலான வித்தியாசமான கதாபாத்திரம் ஐஸ்வர்யாவுக்கு தரப்பட்டுள்ளது.

நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா தமிழில் நேரடியாகக் களமிறங்கி உள்ளதால் இங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா என நாயகிகளும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்களாக இருப்பதால் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது.
Tags:    

Similar News