சினிமா
ஷேன் நிகம்

தலைமுடியை வெட்டிய சம்பவம் - தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்

Published On 2019-12-14 11:46 IST   |   Update On 2019-12-14 11:46:00 IST
ஒரு படத்திற்காக தலைமுடியை வளர்த்து வெட்டிய சம்பவத்தால் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மலையாளர் நடிகர் ஷேன் நிகம்.
மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் சர்ச்சையில் சிக்கி உள்ளார். வெயில் என்ற படத்தில் ஷேன் நிகமுக்கு தலைமுடியை நீளமாக வளர்த்து நடிக்கும் கதாபாத்திரம். ஆனால் படப்பிடிப்பு முடியும் முன்பே தலைமுடியை வெட்டி தோற்றத்தையும் மாற்றியதால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

இதையடுத்து மலையாள தயாரிப்பாளர் சங்கம் ஷேன் நிகம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷேன் நிகம் தயாரிப்பாளர்கள் மனநலம் பாதித்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என்று சாடினார். ஷேன் நிகமை தமிழில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.



விக்ரம் படம் உள்ளிட்ட எந்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஷேன் நிகமை நடிக்க அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மலையாள திரைப்பட வர்த்தக சபை கடிதம் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் ஷேன் நிகம் தான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர் என்று முகநூல் பக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கருத்து பதிவிட்டார்.

ஆனால் அவரது மன்னிப்பை ஏற்க முடியாது என்று மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடைவேளை பாபு தெரிவித்துள்ளார். ஷேன் நிகம் பிரச்சினை குறித்து வருகிற 22-ந்தேதி நடக்கும் நடிகர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Similar News