சினிமா
நடிகர் ராஜ்கிரண்

கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம் - ராஜ்கிரண் கண்டனம்

Published On 2020-04-21 20:21 IST   |   Update On 2020-04-21 20:21:00 IST
எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நடிகர் ராஜ் கிரண் காட்டமாக பதிவு செய்திருக்கிறார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அவர்களுக்காக சேவை செய்து வருகின்றனர் மருத்துவர்கள், செவிலியர்கள். இந்நிலையில் கொரோனா நோய் தாக்கி டாக்டர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.



நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் இதுகுறித்து, “எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப் பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதான் என்றால், இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும். இதைப்போன்ற கொடுமைகளுக்கு கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்...”

இவ்வாறு காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Similar News