சினிமா
அஜித்தின் உதவியை எதிர்பார்க்கும் தீப்பெட்டி கணேசன்
ரேணிகுண்டா படம் மூலம் மிகவும் பிரபலமான தீப்பெட்டி கணேசன், அஜித்தின் உதவியை எதிர்பார்த்து இருப்பதாக கூறியிருக்கிறார்.
ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் இருந்தார்.
தொடர்ந்து வறுமையில் வாடி வரும் அவருக்கு தற்போது கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் அவரது குடும்பம் வாடி வந்தது. அவருக்கு நடிகர் விஷால் தரப்பில் சமீபத்தில் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது அவர் ஒரு பேட்டியில் பேசும்போது அஜித்திடம் உதவி கேட்டு கண்ணீர் விட்டுள்ளார். அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை என கூறியுள்ளார்.
"என்னுடைய உண்மையான பெயர் கார்த்திக். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான். ஏகப்பட்ட முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன். அவரை ஒருமுறையாவது பார்த்துவிட முடியுமா என பல முறை முயற்சித்தேன். அஜித் சார் பார்த்தால் என் குழந்தைகளுக்கு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.