சினிமா
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை - விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் 2 காா்களை வழங்கினா்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா்.
விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் இரண்டு காா்களையும் மன்ற நிா்வாகிகள் ஒப்படைத்தனா்.