சினிமா
விஜய் வசனம் பேசி வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் நடிகர்
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் மகேந்திரன்
அந்த வகையில், மாஸ்டர் படத்தில் குட்டி பவானி கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன், விஜய் பேசும் வசனத்தை பேசி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து பல லைக்குகளை குவித்து வருகிறது.
ஆமா அண்ணா, உங்கள பிடிச்சவங்க கோடி பேர் இருக்கோம் இங்க, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் தங்க தளபதி @actorvijay அண்ணா ❤️#Beast mode 🔛#ThalapathyVijay#HBDTHALAPATHYVijaypic.twitter.com/9RSe2hwDAx
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) June 22, 2021