சினிமா
முதலமைச்சருடன் அர்ஜுன்

முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த அர்ஜுன்... காரணம் தெரியுமா?

Published On 2021-06-29 15:57 IST   |   Update On 2021-06-29 15:57:00 IST
பிரபல நடிகர் அர்ஜுன், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன், முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டது.

ஆனால், நடிகர் அர்ஜுன் கோவில் ஒன்றை கட்டி இருப்பதாகவும், அந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு முதல்வர் முக ஸ்டாலினை அழைக்க வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


முதலமைச்சருடன் அர்ஜுன்

இந்த சந்திப்பின் போது முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Similar News