சினிமா
பகத் பாசில் பிறந்தநாள்... மாஸான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய விக்ரம் படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவர் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஏற்கனவே வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ள பகத் பாசில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
பகத் பாசில் பிறந்தநாளுக்காக விக்ரம் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், விக்ரம் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.