சினிமா
தலைகீழாக நின்று யோகாசனம் செய்து அசத்திய மாளவிகா - வைரலாகும் புகைப்படம்
உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாளவிகா, தனது தோற்றத்தை இன்றைக்கும் இளமையுடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் அஜித் நடித்த ’உன்னை தேடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதன்பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடிக்கட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சித்திரம் பேசுதடி, சந்திரமுகி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததை அடுத்து குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.
இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாளவிகா, தனது தோற்றத்தை இன்றைக்கும் இளமையுடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.
சமீபகாலங்களில் மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் யோகாசனம் செய்து வருகிறார். இந்நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா, அங்கு தலைகீழாக நின்று யோகாசனம் செய்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.