சினிமா செய்திகள்

ஒரே நாளில் சகோதரி, சகோதரனை இழந்த பிரபல குணச்சித்திர நடிகர்

Published On 2023-06-24 00:08 IST   |   Update On 2023-06-24 00:08:00 IST
  • இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • இருவரின் இறுதி ஊர்வலமும் நாளை அறந்தாங்கியில் நடைபெறுகிறது.

'ஈரநிலம்' படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். சின்னத்திரையில் பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி மாடம்' படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சாதி மற்றும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து போஸ் வெங்கட் மா.பொ.சி என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில், நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்துள்ளார்.

இருவரும் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரணடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதனும் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இருவரின் இறுதி ஊர்வலமும் இன்று அறந்தாங்கியில் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News