சினிமா செய்திகள்
கண்ணா லட்டு தின்ன ஆசையா.. திருப்பதியில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்
- லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
- கார்த்தி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் கார்த்தி தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி கோவிலுக்கு செல்லும் வழியில் தன்னை சந்திக்க வந்த மக்களுடன் நடிகர் கார்த்தி கைக்குலுக்கி, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
முன்னதாக மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் 'என கார்த்தி கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லட்டு குறித்து கார்த்தி கிண்டலாக பேசியதற்கு ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.