சினிமா செய்திகள்

தமிழ் இயக்குனர் என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்... நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2024-09-05 16:39 IST   |   Update On 2024-09-05 16:39:00 IST
  • ஹேமா அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
  • தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை சவுமியா பாலியல் சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அந்த அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை சவுமியா பாலியல் சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை சவுமியா, "எனக்கு அப்போது 18 வயது, நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். என் பெற்றோருக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. அந்த நேரத்தில் தான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது என் வீட்டின் அருகே வசித்த நடிகை ரேவதியால் மயங்கிக் கிடந்தேன்

இயக்குநர் மற்றும் அவரது மனைவியுடன் படத்தில் நடிப்பதற்கான ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு நான் சென்றேன். படத்தில் நடிக்கும் போது நான் முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். அவரின் ஒவ்வொரு மிரட்டலுக்கும் நான் பயந்தேன்.

ஒருநாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாதபோது என்னை அவரது மகள் என்றுகூறி முத்தமிட்டார். அப்போது நான் உறைந்துவிட்டேன். என்னால் அப்போது அதனை வெளியில் சொல்லமுடியவில்லை. பிறகு என்னை அவர் பலமுறை பலாத்காரம் செய்தார். நான் கல்லூரி படித்த காலத்தில் ஒரு வருடத்திற்கு மேல் இது நடந்தது. அப்போது நான் இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன்.

அப்போது அந்த இயக்குனர் என்னை அவரது மகள் என்றும் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் அப்போது என் மூளையை மொத்தமாக குழப்பிவிட்டார்.

இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது" என்று வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

"தனக்கு நேர்ந்த துயரத்தை காவல்துறையிடம் பகிர்ந்து கொண்டதாக கூறிய சௌமியா, தனது பாதுகாப்பை மனதில் வைத்து இயக்குனரின் பெயரை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News