கூலி படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே - வெளியான புது அப்டேட்
- கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
இந்நிலையில், 'கூலி' படத்தின் பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டா நடனம் ஆடியிருப்பதாக படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது.
முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இந்தப் பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.