
ஆஸ்கார் விருதில் இந்திய படங்கள் புறக்கணிப்பு- தீபிகா படுகோனே வருத்தம்
- நமக்கு வரவேண்டிய ஆஸ்கார் விருதுகள் அபகரிக்கப்படுகின்றன.
- இந்திய சினிமா வரலாற்றில் நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன.
தமிழில் ரஜினியின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.
இந்த நிலையில் இந்திய படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைக்காததற்கு தீபிகா படுகோனே வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தீபிகா படுகோனே கூறும்போது, "இந்தியாவில் ஆஸ்கார் விருதுக்கு தகுதியான பல படங்கள் தயாராகி உள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆஸ்கார் விருது வழங்காமல் புறக்கணித்து விட்டனர்.
நமக்கு வரவேண்டிய ஆஸ்கார் விருதுகள் அபகரிக்கப்படுகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன. அந்த படங்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளின் திறமைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அந்த நொடிகள் எனக்கு முக்கியமாக இருந்தது. அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் ஒரு இந்தியராக அந்த வெற்றி மிகச்சிறந்ததாக தோன்றியது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.