சினிமா செய்திகள்

"வணங்கான்" பெயருக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Published On 2024-07-19 20:13 IST   |   Update On 2024-07-19 20:13:00 IST
  • ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
  • வணங்கான் என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பரபரப்பான படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே, வணங்கான் படத்தின் பெயருக்கு எதிராக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் தடை விதிக்கக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வணங்கான் என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த மனு மீதான விசாரணையின்போது, " 2 ஆண்டுகள் அமைதியாக இருந்த பின், பணம் பறிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளார்" என்று இயக்குனர் பாலா தரப்பு கூறப்பட்டது.

இந்நிலையில், வணங்கான் பெயருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News