சினிமா செய்திகள்

பிரபல நடிகையின் மகள் திடீர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published On 2024-08-07 10:58 IST   |   Update On 2024-08-07 10:58:00 IST
  • காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்.
  • உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பிரபல பாலிவுட் நடிகை திவ்யா சேத். பனேகி ஆப்னி பாட், ஹம் லோக், தில் ததக்னே தோ என பல்வேறு பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைகாட்சி தொடர்கள், இணைய தொடர் உள்ளிட்டவைகளிலும் நடித்து வருகிறார்.

இவரது மகள் மிஹிகா ஷா உயிரிழந்துள்ளார். இது பற்றிய தகவலை திவ்யா சேத் பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். உயிரிழப்பு பற்றி மட்டும் அறிவித்த திவ்யா சேத், தனது மகள் உயிரிழக்க என்ன காரணம் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கவில்லை.

இது குறித்து வெளியான தகவல்களின் படி மிஹிகா ஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், அதன் பிறகு அவரது உடல்நிலை நலிவுற்று உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகை திவ்யா சேத் பிரபல நடிகை சுஷ்மா சேத்-இன் மகள் ஆவார். இவர் பாலிவுட்டில் பல பெரிய நட்சத்திரங்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News