சினிமா செய்திகள்
null

எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கு - அஞ்சலி

Published On 2024-05-31 10:14 GMT   |   Update On 2024-05-31 10:51 GMT
  • முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
  • நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம்.

தெலுங்கு திரையுலகில் உருவாகும் புதிய படம், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி." இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஷ்வாக் சென் மற்றும் அஞ்சலி ஜோடி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜூ ரமணா, ஆயிஷா கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் இன்று (மே 31) வெளியானது. இதையொட்டி, இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவுடன், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளி நிற்க கூறும் போது, அவரை தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. வீடியோவின் படி பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிடுவதும், அதனை அவர் சகஜமாக எடுத்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எனினும், வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான பதிவில், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை தனது வருகையால் சிறப்பாக மாற்றிய பாலாகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

"எனக்கும் பாலாகிருஷ்ணா அவர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் மற்றும் இருவருக்கும் இருவர்மீதும் நல்ல மரியாதை உள்ளது. நீண்ட காலமாக எங்களிடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. அவருடன் மீண்டும் மேடையை பகிர்வது அருமையாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார். 


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News