`அபிமன்யூவை' காதலித்து வருகிறேன்- சாய்பல்லவி
- ‘தண்டேல்’ என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.
- மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. படத்தில் இவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தனுசுடன் மாரி-2 மற்றும் தியா, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தி மொழியில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜூனனின் மகன் அபிமன்யூவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யூவை பற்றி நிறைய படித்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.