Dhoom 4 படத்தின் வில்லன் சூர்யா?
- சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- தூம் திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றிப்பெற்ற திரைப்படமாகும்.
சூர்யா அடுத்ததாக கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இதைத்தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா இந்தியில் தூம்- 4 படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூம் திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றிப்பெற்ற திரைப்படமாகும். அதன் முந்தைய பாகம் அனைத்தும் பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமாகும். கடைசியாக தூம் 3 திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. அமீர் கான் அதில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
இந்த தகவல் உண்மையெனில் சூர்யா நடிக்கும் முதல் திரைப்படம் இதுவே ஆகும். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.