
null
- கராத்தே வீரர் ஹூசைனி பல படங்களில் நடித்துள்ளார்.
- ரத்த புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.
ஷிஹான் ஹுசைனி தனக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கராத்தே, வில்வித்தை வீரரும், நடிகருமான ஹூசைனி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
புற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கராத்தே ஹூசைனி உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக தான் உயிரிழந்த மூன்று நாட்களுக்கு பிறகு, தனது உடலை ஸ்ரீ ராசந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக ஹூசைனி வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார்.