
நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது முஃபாசா
- இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.
- இப்படம் கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் 20-ந்தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து 1994 ஆம் ஆண்டில் ஒரு படமும், 2019 ஆம் ஆண்டில் மற்றொரு படமும் வெளியாகி உள்ளது. இதனால் லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது.
இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம்.
அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.
இப்படம் கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் 20-ந்தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்திய அளவில் சாதனை படைத்த இப்படம் ஓடிடி-யில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், நாளை ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் காத்திருப்பை நிறைவு செய்கிறது முஃபாசா. இத்திரைப்படம் நாளை முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.