null
ஒருவேளை இருக்குமோ? அஜித்-ஐ சந்தித்த வெங்கட் பிரபு
- தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்
- வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் , திரிஷா, வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து வெளியானது மங்காத்தா திரைப்படம். இப்படம் அஜித்தின் 50- வது திரைப்படமாகும், இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்தது.
தற்பொழுது வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார், படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என கமெண்ட்சில் பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.