துருவ நட்சத்திரம் வெளியாகாத போது யாரும் உதவவில்லை - கவுதம் வாசுதேவ் மேனன்
- நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் 'துருவ நட்சத்திரம்'.
- கவுதம் வாசுதேவ் மேனன் மம்மூட்டி நடிப்பில் டோமினிக் லேடிஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படக்குழுவால் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் தற்பொழுது மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் டோமினிக் லேடிஸ் பர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சில விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக சூழ்நிலையில் இருக்கும் போது யாரும் எனக்கு உதவவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டுக்க கூட இல்லை. ஒரு திரைப்படம் வெற்றிப்பெற்றால் அதை ஓ அப்படியா என கேட்பார்கள். அதற்கு யாரும் சந்தோஷம் அடைய மாட்டார்கள். தாணு சார், லிங்குசாமி, இந்த இருவர் மட்டுமே எனக்கு கால் செய்து பேசினர். இத்திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.