பாலைய்யா திரைப்படத்தின் ரீமேக்கா தளபதி 69? - விடிவி கணேஷ் சர்ச்சை பேச்சு
- நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69"
- பகவந்த கேசரி திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பாலைய்யா
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
சமீப காலமாக இத்திரைப்படம் தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் என வதந்திகள் பரவி வருகிறது. பகவந்த கேசரி திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பாலைய்யா நடித்து இருந்தார் இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கினார்.
அனில் ரவிபுடி தற்பொழுது வெங்கடேஷ், ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் சங்கிராந்திகி வஸ்துனம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைப்பெற்றது. அதில் படக்குழு அனைவரும் கலந்துக்கொண்டனர். அதில் நடிகர் விடிவி கணேஷ் பேசியது தற்பொழுது சர்ச்சைக்குரிய ஒன்றாய் மாறியுள்ளது.
அதில் அவர் " பகவந்த் கேசரி திரைப்படத்தை விஜய் சார் 5 தடவைப் பார்த்தார். அவருக்கு திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அனில் ரவிபுடியை விஜய் திரைப்படத்தை இயக்குமாரு ஆசைப்பட்டார். இதனால் நான் அனில் ரவிபுடியை அழைத்தேன் ஆனால் ரவிபுடி நான் ரீமேக் திரைப்படம் செய்ய விருப்பமில்லை என கூறிவிட்டார். அங்க தமிழ்நாட்டில் பல முன்னணி இயக்குனர்கள் விஜயின் திரைப்படத்தை இயக்க கியூவில் இருக்கிறார்கள். ஆனால் ரவி வேண்டாம் என கூறிவிட்டார். " உடனே மேடையில் இருந்த இயக்குனர் ரவி "நான் இயக்க மாட்டேன் என கூறவில்லை , ரீமேக் திரைப்படத்தை பண்ண மாட்டேன் என்று தான் கூறினேன். நானும் அவரும் டிஸ்கஸ் செய்தது வேறு அது வேறு படத்திற்கு" என கூறினார்.
இதனால் தளபதி 69 திரைப்படம் பகவந்த கேசரி திரைப்படத்தின் ரீமேக்கா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது?
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.