Thank You Shalu - மனைவிக்கு நன்றி கூறிய அஜித்
- துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
- நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. தற்போது மூன்றாவது இடம்பிடித்துள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு அஜித் குமார் உரிமையாளராக மட்டுமே செயல்பட்டார்.
கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த நடிகர் அஜித் குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது மற்றொரு வீடியோவை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதில் துபாய் ஆட்டோடிரோமை சார்ந்த சீஃப் பிட்ஸ் இம்ரான் என்பவர் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது " இது எனக்கு ஒரு பெருமையான தருணம். 20 வருடம் ஆனது ஒரு இந்தியகொடி இந்த ரேஸ் டிரக்கில் பறப்பதற்கு. என் கனவை அஜித்குமார் நிறைவேற்றியுள்ளார். நான் மிகவும் சந்தோஷமாகவுள்ளேன். அஜித் ஒரு மிகச் சிறந்த மனிதன், நேர்மையான மனிதன் நல்ல குடும்பஸ்தன்" என்றார் . அதைத்தொடர்து பேசிய அஜித் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறினார். அவரது நண்பர்கள், ரசிகர்கள், குடும்பம் என அனைவருக்கும் நன்றி கூறினார். அவர்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. அஜித்குமார் ரேசிங் மேலும் பல வருடங்களுக்கு இங்கு இருக்கும் . மேலும் என் மனைவி ஷாலுக்கு மிக்க நன்றி என்னை ரேசிங் ஓட்ட விட்டதற்கு."என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.