இந்தியாவில் முதல்முறையாக பிரபு தேவா நடத்தும் Live Dance Concert
- நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது.
- பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமனா அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்த நடன நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.
ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கிவைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின் திட்ட இயக்குனர் திரு.P.K அபி மன்னனிடம் வழங்கினார்.
இந்நிகழ்வினில் நடிகர் நடன கலைஞர் பிரபுதேவா பேசியதாவது..
இது மிக இனிமையான தருணம். அருண் ஈவண்ட்ஸ்க்கு என் முதல் நன்றி. நான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கூட பார்த்ததில்லை, அருண் ஈவண்ட்ஸ் முயற்சிதான். ஹரி இதற்கு ஒரு பேக்போனாக இருந்தார். இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான். நீங்கள் சினிமா போல எதிர்பார்ப்பீர்கள். சினிமாவில் கட் பண்னி, கட் பண்ணி ஆடுவோம். இதில் அப்படி முடியாது தொடர்ந்து ஆட வேண்டும். அதற்காக தொடர்ந்து ரிகர்சல் செய்து வருகிறேன். உங்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக 200 சதவீத உழைப்பை போட்டு வருகிறேன். கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்.
எல்லோருக்கும் நன்றி.
நடன நிகழ்வின் இயக்குநர் ஹரிக்குமார் பேசியதாவது…
திரையில் 10 வருடம் கடந்தாலே பெரிய விசயம், 30, 40 வருசம் எல்லாம் இருப்பது ஆசிர்வாதம். அதிலும் கோரியொகிராஃபராக இருப்பதும், இப்போதும் ஆட தயாராக இருப்பதும் அதிசயம் தான். அவரோடு இத்தனை நாள் நான் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இந்த நிகழ்வை ஆரம்பித்த கணத்தில் இருந்து இப்போது வரை, அதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார், ரிகர்சல் எடுத்து வருகிறார். இன்னும் பல விசயங்கள் இருக்கிறது. அருண் ஈவண்ட்ஸுக்கு மீண்டும் நன்றி. அனைவருக்கும் நன்றி,
அருண் ஈவண்ட்ஸ் சார்பில் அருண் பேசியதாவது…
நிறைய மியூசிக் கான்சர்ட் செய்துள்ளேன் ஆனால் டான்ஸ் ஷோ செய்ய வேண்டும் என ஆசை. அதை எப்படி சாத்தியமாக்கலாம் என யோசித்து வந்தேன். அந்த வாய்ப்பை வழங்கிய பிரபுதேவா மாஸ்டருக்கு நன்றி. இப்போதே 23000 டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விட்டது. ஓபன் கிரவுண்டில் 5.1 சவுண்ட் செய்துள்ளோம்: ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக வேல்ஸ் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. இந்த ஷோ கண்டிப்பாக புதிய அளவில் வேறு மாதிரி அனுபவமாக இருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..
பிரபுதேவாவை கிட்டதட்ட 30 வருடமாக கவனித்து வருகிறேன். என் குடும்பத்தில் ஒருவர். அருண் ஈவண்ட்ஸ் அருண், எப்போதும் புதுப்புது விசயங்கள் செய்து வருகிறார், எங்கள் நிறுவனத்தில் பல புதிய விசயங்களை செய்வோம், அதைத் தாண்டி அருண் இந்நிகழ்ச்சியில் பல புதிய விசயங்கள் செய்துள்ளார். காலத்தால் அழிக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.