- உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
- சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.
இந்தி நடிகையான ஹினா கான் சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். நோயில் இருந்து விரைவில் மீள்வேன் என்றும், இந்த கஷ்ட நேரத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஹினா கான் விரைவில் குணமாக வேண்டி பலரும் வாழ்த்தினர்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவும் ஹினா கான் குணம் அடைய வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து சமந்தா கூறும்போது, "நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைய உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். தைரியமாக இரு. ஹினாகான் ஒரு போராளி'' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சமந்தாவுக்கு நன்றி தெரிவித்து ஹினா கான் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை. வாழ்க்கையில் வரும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.
உங்களிடம் இருந்து நான் நிறைய கற்று கொண்டு வருகிறேன். உங்கள் அன்புக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.