அண்ணான்னு மட்டும் கூப்பிடாத.. சாய் பல்லவி குறித்து சிவகார்த்திகேயன் Fun ஸ்பீச்
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
- இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பங்கேற்றனர்.
பல சுவாரசியமான விஷயங்கள் இசை வெளியீட்டு விழாவில் நடைப்பெற்றது. சிவகார்த்திகேயன் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார் அதில் பிரேமம் திரைப்படம் வெளியான போது படத்தை பார்த்துவிட்டு நானும் மலர் டீச்சருக்கு ரசிகனானேன். பிறகு சாய் பல்லவியின் போன் நம்பரை கண்டுபிடித்து கால் செய்து மலர் டீச்சராக அருமையாக நடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். அப்பொழுது அவர் போனில் " அண்ணா... தேங்க் யூ சோ மச் அண்ணா.." என்றார். நான் ஆனாலும் அதை கண்டுக்காமல் வேறு சீன்களை பற்றி பேசினேன் ஆனாலும் அவர் தேங்க் யூ அண்ணா சொல்வதை நிறுத்தவில்லை.
பிறகு " ஹே ஸ்டாப் நான் மலர் டீச்சரா மன்சுல நெனசு பேசுறேன் நீயும் அப்படியே பேசு இல்லன்னா அந்த படத்துல வந்த மாதிரி மறந்துக் கூட போயிடு ஆனா என்ன அண்ணான்னு மட்டும் சொல்லாத" என மிகவும் நகைச்சுவை பாணியில் கூறியுள்ளார். இதைக்கேட்ட அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.