சினிமா செய்திகள்
null

மகன் திருமணம் விழா: நடனமாடி அசத்திய நீதா அம்பானி

Published On 2024-03-04 13:10 IST   |   Update On 2024-03-04 14:00:00 IST
  • மகன் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய மனதார வாழ்த்துவது போல, பாடலும், நடனமும் அமைந்திருந்தது
  • காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து பக்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடினார்.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீதா தம்பதிகளின் இளைய மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகிற ஜூலை 12- ந்தேதி நடக்கிறது.

இந்த திருமணத்தை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் 3 நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர். இதில் இந்திபட சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள். நேற்று 3- வது நாளாக நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பங்கேற்றனர்.

இந்நிலையில் நேற்று முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனது மகன் ஆனந்த் திருமண விழாவில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இந்தி படத்தின் பக்தி பாடல் ஒன்றுக்கு அவர் நடனமாடினார்.

தனது மகன் மற்றும் மருமகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் வகையில், மனதார வாழ்த்துவது போல, இப்பாடலும், நடனமும் அமைந்திருந்தது. இந்த காட்சிகள் 'எக்ஸ்' வலைத்தளத்தில் வைரலாகியது.

Tags:    

Similar News