சினிமா செய்திகள்
null

நடிகர் நாசரின் தந்தை காலமானார்

Published On 2023-10-10 15:41 IST   |   Update On 2023-10-10 15:53:00 IST
  • திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நாசர்.
  • இவர் நடிகர் சங்க தலைவருமாக உள்ளார்.

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நாசர். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் நடிகர் நாசரின் தந்தை காலமானார். செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசர் திரையுலகில் ஜொலிப்பதற்கு அவரது தந்தையும் ஒரு காரணமாவார். தன் தந்தையின் ஆசைக்காக நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த நாசர் அதன்பின், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரியளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தாஜ் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார். பின்னர் மீண்டும் அவரின் தந்தை கட்டாயத்தின் பேரில் வாய்ப்புகளை தேடி அலைந்து மிகப்பெரும் நடிகராக உள்ளார்.

Tags:    

Similar News