சினிமா செய்திகள்

பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி விஜய் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.. நடிகர் சத்யராஜ் பேச்சு

Published On 2023-06-19 12:30 IST   |   Update On 2023-06-19 12:30:00 IST
  • மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்ச்சியில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
  • அப்பொழுது பெரியார், அம்பேத்கர், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று விஜய் பேசியிருந்தார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், நேற்று முன்தினம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.



இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இது குறித்து அவருடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது; பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை முன்னுதாரனமாக வைத்து அவர் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News