சினிமா செய்திகள்

வாரிசு - துணிவு

'தொடங்கியது வாரிசு Vs துணிவு யுத்தம்..' தியேட்டரில் முட்டிக்கொண்ட அஜித் விஜய் ரசிகர்கள்

Published On 2023-01-08 16:51 IST   |   Update On 2023-01-08 16:51:00 IST
  • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இப்படங்களின் டிரைலர்கள் வெளியாகி வைரலானது.

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வருகிற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

 

வாரிசு - துணிவு

வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு மற்றும் வாரிசு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

வாரிசு - துணிவு

 

இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னையில் உள்ள ஒரு திரையரங்குகிற்கு ரசிகர்கள் திரண்டிருந்தனர். அச்சமயம் இரு தரப்பு ரசிகர்களும் துணிவு, வாரிசு என்று கோஷமிட இதனை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் ஆரோக்கியமாக தங்களின் படங்களின் பெயர்களை கூச்சமிட்டாலும், 'இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள..?' என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News