சினிமா செய்திகள்
ரொமான்ஸில் அசத்தும் ராஷ்மிகா- ரன்பீர் கபூர்.. வைரலாகும் பாடல்
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'நீ வாடி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர் - ராஷ்மிகா ரொமான்ஸில் அசத்தும் இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.