சினிமா செய்திகள்

பிரகதி

null

பாக்யராஜ் பட நடிகைக்கு மறுமணமா? மனம் திறந்த பிரகதி

Published On 2023-01-06 09:05 IST   |   Update On 2023-01-06 09:14:00 IST
  • பாக்யராஜ் நடித்து இயக்கி 1994-ல் வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரகதி.
  • நடிகை பிரகதி தற்போது மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.

பாக்யராஜ் நடித்து இயக்கி 1994-ல் வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரகதி. தொடர்ந்து பெரிய மருது உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக வந்தார். ஜெயம், சிலம்பாட்டம், எத்தன், தோனி, கெத்து, தாரை தப்பட்டை போன்ற படங்களில் அம்மா, அண்ணி, அக்கா என்று குணசித்திர வேடங்களில் நடித்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

 

பிரகதி


பிரகதி தனது 20-வது வயதில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில் பிரகதி தற்போது மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.


பிரகதி

இதற்கு பிரகதி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது. ''எனக்கு இப்போது 47 வயது ஆகிறது. இந்த வயதில் மறுமணம் செய்து கொள்வது பற்றி யோசித்து பார்க்கவே முடியவில்லை. பல வருடங்கள் தனியாகவே இருந்து விட்டேன். வாழ்க்கையில் பல பிரச்சினைகளை தனியாகவே சந்தித்து மீண்டு இருக்கிறேன். இனிமேல் திருமணம் செய்து கொள்வது சரிவராது. வாழ்க்கையில் துணை இனிமேல் தேவை இல்லை'' என்றார்.

Tags:    

Similar News