சினிமா செய்திகள்
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய பிரியங்கா மோகன்
- தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரியங்கா மோகன் பதிவு
'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியில் நடிகை பிரியங்கா மோகன் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.