சினிமா செய்திகள்

ரன்பீர் கபூர் படம் பார்க்க சிறுவர்களுக்கு அனுமதி இல்லையா..? காரணம் இதுதான்

Published On 2023-11-23 10:38 IST   |   Update On 2023-11-23 10:38:00 IST
  • ரன்பீர் கபூர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
  • இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதன் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 21 நிமிடம் 23 நொடி எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ரன்னிங் டைமை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய்யுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News