சினிமா செய்திகள்

டாடா

கவனம் ஈர்க்கும் 'டாடா' படத்தின் டிரைலர்

Published On 2023-02-06 11:00 IST   |   Update On 2023-02-06 11:00:00 IST
  • நடிகர் கவின், அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘டாடா’.
  • இப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


டாடா

இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


டாடா

இந்நிலையில், 'டாடா' படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Full View

Tags:    

Similar News