null
ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் தாஸ் கா தம்கி படக்குழு
- தெலுங்கு மொழியில் வெளியான ஃபலக்னுமா தாஸ் படத்தை விஷ்வக் சென் இயக்கியிருந்தார்.
- தற்போது இவர் இயக்கி வரும் படம் தாஸ் கா தம்கி.
வெள்ளிபூமகே என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்வக் சென். பின்னர் 2019-ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஃபலக்னுமா தாஸ் படத்தை இயக்கியதன் மூலம் விஷ்வக் சென் அனைவராலும் இயக்குனராக அறியப்பட்டார். தற்போது இவர் இயக்கி இருக்கும் அடுத்த படம் தாஸ் கா தம்கி. இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷ்வக் சென்னுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இப்படத்தை வன்மயே கிரியேஷன்ஸ் மற்றும் விஸ்வக்சன் சினிமாஸ் பேனர்களின் கீழ் கராத்தே ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதை மற்றும் வசனத்தை பிரசன்ன குமார் பெசவாடா எழுதியுள்ளார்.
தாஸ் கா தம்கி
ரொமாண்டிக் காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் தாஸ் கா தம்கி திரைப்படம் 95% படப்பிடிப்பு முடிந்து, மீதமுள்ள பகுதி ஒரு வாரத்தில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தின் கிளைமேக்ஸை ஆர்ஆர்ஆர் படத்தில் ஸ்டண்ட் அமைத்த பல்கேரிய ஃபைட் மாஸ்டர்களான டோடர் லாசரோவ்-ஜூஜி படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தாஸ் கா தம்கி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.